எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை: இணைக்கப்பட்ட நகரங்களில் புடின் விதித்துள்ள புதிய சட்டம்
இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் புடின் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என ரஷ்யா விளக்கம்.
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போர் நடவடிக்கையில் உச்சக்கட்டமாக Donetsk, Luhansk மக்கள் குடியரசுகள், Zaporizhzhia மற்றும் Kherson ஆகிய நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்தார்.
இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருவதுடன், ரஷ்யாவின் அறிவிப்பை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
— ТРУХА⚡️English (@TpyxaNews) October 19, 2022
இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பகுதிகளிலும் இராணுவ சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி புடின் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னதாக ( ரஷ்யாவுடன் இணைவதற்கு முன்பு ) கைப்பற்றப்பட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவ சட்டம் திணிக்கப்பட்டது, ஆனால் இப்போது நாம் ரஷ்ய இராணுவ சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இந்த ஆட்சியை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆக்கிரமிப்பு நிர்வாகங்களின் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆவணங்கள் உடனடியாக கூட்டமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படும் என்றும், புடினின் முடிவை அங்கீகரிப்பது கூட்டமைப்பு கவுன்சில் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை: 40 ஆண்டு கால உச்சத்தில் பணவீக்கம்
இதற்கிடையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.