போரை ரஷ்யா நிறுத்தப்போவதில்லை: புடினை பேச்சுவார்த்தைக்கு இழுக்க இது மட்டுமே வழி
உக்ரைனை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியாக இருப்பதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்வாங்காத புடின்
சமீபத்தில் போர் ஆய்வுக்கான நிறுவனம் வெளியிட்டுள்ள புதுப்பித்தலில், புடின் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை, அதற்கு மாறாக முழுமையான வெற்றியைத் தேடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்க் டேங்க்-ன் அறிக்கையில், போர் வெடித்ததில் இருந்து புடின் தனது நோக்கங்களை மாறவில்லை, அவரது இராணுவ முயற்சிகள் பெரிய தோல்வியை சந்தித்து இருந்தாலும், புடினை பேச்சுவார்த்தை மேசைக்கு அவை இழுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sky News
மேற்கத்திய நாடுகளால் உக்ரைன் கைவிடப்படுவதன் மூலம் அல்லது உக்ரைனியர்களின் விருப்பத்தை உடைப்பதன் மூலம் உக்ரைன் மீதான தனது விருப்பத்தை திணிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் நம்பும் வரை இந்த போர் தொடரும் என ISW (Institute for the Study of War)தெரிவித்துள்ளது.
ஒரே வழி
அதே சமயம் உக்ரைனிய ஆயுதப் படைகள் தங்களது எதிர்த்தாக்குதல் மூலம் லாபம் அடைய முடியும் என்று எதிர்பார்ப்பதில் காரணம் உள்ளது என்று ISW குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் தொடர்ச்சியான வெற்றிகள் மட்டுமே, உக்ரைனில் பிராந்திய வெற்றியை தவிர்த்து வேறு நிபந்தனைகளில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடினை வற்புறுத்தும் என்று திங்க் டேங்க் தெரிவித்துள்ளது.
AP/REX/Shutterstock