அடங்காத ஆத்திரம்... உக்ரைன் நகரங்களை பேய்த்தனமாக வேட்டையாடிய விளாடிமிர் புடின்
உக்ரைனின் மேற்கில் Lviv பகுதி தொடங்கி கிழக்கில் Dnipro வரை மூர்க்கத்தனமான தாக்குதல்
தலைநகர் கீவ் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்களை ரஷ்யா பேய்த்தனமாக தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கோரத் தாக்குதலால் உக்ரைன் தலைநகர் பற்றியெரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளன.
@reuters
உள்ளூர் நேரப்படி பகல் 8.45 மணிவரை வெளியான தகவலில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 24 பேர்கள் படுகாயங்களுடன் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது. பள்ளி மாணவர்கள் பாடசாலை செல்லும் நேரம் ரஷ்ய தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்பாவி குழந்தைகள் பாதுகாப்பு தேடி ஓடி ஒளிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது கவனமாக திட்டமிடப்பட்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், உக்ரைனின் மேற்கில் Lviv பகுதி தொடங்கி கிழக்கில் Dnipro வரை மூர்க்கத்தனமான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
@reuters
வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் நான்கு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. திங்களன்று முன்னெடுக்கப்பட்டுள்ள கொலைவெறி தாக்குதல்களுக்கு உக்ரைன் கண்டிப்பாக பதிலடி தரும் என பாதுகாப்பு அமைச்சகம் சபதமிட்டுள்ளது.
மேலும், தலைநகர் கீவ் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டுமின்றி, திங்களன்று முன்னெடுக்கப்பட்ட இந்த இரக்கமற்ற தாக்குதலில் 75 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாகவும், அதில் 41 ஏவுகணைகளை உக்ரைன் தரப்பு செயலிழக்க செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
கீவ் மீதான தாக்குதலை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு மற்றும் காயம் பட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, விளாடிமிர் புடின் ஒரு தீவிரவாதி எனவும் அவர் ஏவுகணையால் பதிலளிப்பது கொடூரத்தின் உச்சம் எனவும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters