புற்றுநோயை உண்டாக்கும் ஹெவி மெட்டல் உப்புகள்...புடினின் எதிர்கட்சி அரசியல்வாதிக்கு வைக்கப்பட்ட விஷம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் எதிர்கட்சி அரசியல்வாதியான எல்விரா விகாரேவா புற்றுநோயை உண்டாக்கும் ஹெவி மெட்டல் உப்புகளால் விஷம் வைக்கப்பட்டு உடல்நலக் குறைவுடன் போராடி வருகிறார்.
விஷம் வைக்கப்பட்ட எதிர்கட்சி அரசியல்வாதி
மாஸ்கோவை தளமாக கொண்ட அரசியல்வாதியும், புடினின் எதிர் விமர்சகருமான எல்விரா விகாரேவா(Elvira Vikhareva) , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிர உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எல்விரா விகாரேவா(32) வயிற்று வலி, முடி உதிர்தல், இதய படபடப்பு, மூட்டுகளில் உணர்வின்மை மற்றும் வலிப்பு, மயக்கம் போன்றவற்றை கடந்த சில மாதங்களாக பல முறை அனுபவித்து வருகிறார்.
Elvira Vikhareva/Instagram
இந்நிலையில் மருத்துவ சோதனைகளை மேற்கோள்காட்டி தி இன்சைடர் தெரிவித்துள்ள கருத்தில், எல்விரா விகாரேவா புற்றுநோயை உண்டாக்கும் கனரக உலோக உப்புகளால் விஷம் வைக்கப்பட்டு இருக்கலாம்.
அவரது உடல் அறிகுறிகள், கனரக உலோக உப்புகளுடனும், நீடித்த நச்சு தன்மையுடனும் ஒத்துப்போகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 நவம்பரில் நோய்வாய்ப்பட தொடங்கியதாக விகாரேவா, மருத்துவ சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
AP/REX/Shutterstock
நான் சரணடைய மாட்டேன்
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நேற்று கருத்தை எழுதிய விகாரேவா, ”உங்கள் நம்பிக்கையை உயர்த்தாதீர்கள், நான் சரணடைய மாட்டேன், நான் ஒரு மூலையில் சிக்கிக் கொள்ள மாட்டேன், நான் அமைதியாக இருக்க மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த டிசம்பரில் ரஷ்ய ஜனாதிபதி புடினை கோப்ளின் (goblin) என்று விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.