இப்படி நடந்தால் அது புடினுக்கு போர் வெறியை ஏற்படுத்தும்: எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி
உக்ரைன் மீதான போர் புடினுக்கு வெற்றியை தரும் என்றால், அது அண்டை நாடுகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆதரவை அளிக்க தயங்கும்
உக்ரைன் ஜனாதிபதி தனது எதிர் தாக்குதலுக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு எதிராக ஒன்றுபடுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, சில நட்பு நாடுகள் போதுமான ஆதரவை அளிக்க தயங்குவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
@AP
மேலும், ரஷ்யாவை தோற்கடிக்க உதவும் மேம்பட்ட பீரங்கிகளை ஏன் உக்ரைனின் நட்பு நாடுகள் வழங்க மறுக்கிறது என்பது புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவை வெற்றிகொள்வது உறுதி என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஆனால் உரிய ஆதரவு முறையாக கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த போரில் தாங்கள் தோல்வியை தழுவினால், அது புடினுக்கு போர் வெறியை ஏற்படுத்தும் எனவும், அது உக்ரைன் நாட்டுடன் நின்று விடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
@AFP
புடினின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை
உக்ரைன் நாட்டை வெற்றிகொள்வதன் மூலமாக தமது சர்வதேச எதிரிகளை சரணடையை வைக்க வேண்டும் என்ற திட்டம் புடினிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் மீதான போரை நிறுத்த அவரிடம் கெஞ்ச வேண்டும் என புடின் எதிர்பார்ப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ஆனால் உக்ரைன் தொடர்பில் அவரது கணக்குகள் தவறாக போய்விட்டது என்றே கூறுகின்றனர். உலக ஆதிக்கத்திற்கான புடினின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்குமாறு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிடம் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
@EPA