தொலைபேசி, இணையம் எதுவும் இல்லை: உச்சக்கட்ட பயத்தில் ஜனாதிபதி புடின்
புடின் பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைபேசி மற்றும் இணையத்தை பயன்படுத்துவதில்லை என்று ரஷ்யாவின் ரகசிய சேவை தலைவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பில் கவனம் காட்டும் புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின் பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைபேசி மற்றும் இணையத்தை பயன்படுத்துவது இல்லை என்றும், சில சமயங்களில் அவரது பதுங்கு குழியை விட்டு வெளியேறவே மறுத்துவிடுவார் என்றும் ரஷ்யாவின் இரகசிய சேவை தலைவர் க்ளெப் கரகுலோவ்(Gleb Karakulov) தெரிவித்துள்ளார்.
புடின் அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்து மட்டுமே தகவல்களை பெறுகிறார், மேலும் அவர் ஒரு தகவல் வெற்றிடத்தில் வாழ்கிறார் என்று கரகுலோவ் இன்டிபென்டன்ட் மீடியா ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
The Kremlin
கரகுலோவ் புடினின் பாதுகாப்பு வட்டத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்து விலகியவராக கருதப்படுகிறார், இவர் தற்போது ரஷ்ய படைகளின் விலகுதல் விசாரணையில் உள்ளார்.
சிறப்பு பெட்டி
புடின் மேற்கத்திய நாடுகளால் ஏமாற்றப்படுவதை பற்றி மிகவும் கவலைப்படுவதாக தெரிவித்த கரகுலோவ், தன்னுடைய ரகசிய பேச்சுகள் கசிவதை தடுக்க வெளிநாட்டு பயணங்களின் போது புடின் சிறப்பு பெட்டி ஒன்றை தன்னுடன் எடுத்து செல்கிறார் என கூறியுள்ளார்.
east2west news
சுமார் 2.5 மீட்டர் உயரமுள்ள கனசதுரமான இந்த பெட்டியில், உறையாடல்கள் கசியும் என்ற அச்சமின்றி பேசக்கூடிய தொலைபேசி உள்ளது என்று கரகுலோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் புடின் எதிரிகளுக்கு மட்டுமல்லாமல், கோவிட் தொற்று குறித்தும் பயங்கரமாக பயப்படுவதாகவும், இதனால் பதுங்கு குழிகளில் அதிக நேரம் புடின் வாழ்வதாக தெரிவித்துள்ளார்.
AP