புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் மரணம்
மாஸ்கோவில் புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஜெனரல் யாரோஸ்லாவ் மாஸ்காலிக் (Yaroslav Moskalik) கொல்லப்பட்டார்.
இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
பார்க் செய்யப்பட்ட காரை அவர் கடந்தபோது, திடீரென வெடித்தது. வெடிபொருள் காரணமாக அவர் பல மீட்டர் தூரம் வீசப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்து தீப்பற்றியதால் அருகிலுள்ள கட்டிடங்களும் தீக்கிரையாகின. புகை மற்றும் சிதறிய பாகங்கள் அருகிலுள்ள பகுதிகளில் பரவியது.
59 வயதான மாஸ்காலிக், ரஷ்ய இராணுவத்தின் பிரதான புலனாய்வு இயக்குநரகத்தில் பணியாற்றியதோடு, 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உக்ரைன் தொடர்பான இராணுவ பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றிருந்தார்.
🇷🇺CAR EXPLOSION KILLS ONE IN MOSCOW SUBURB
— Mario Nawfal (@MarioNawfal) April 25, 2025
A Volkswagen exploded in a residential yard in Balashikha, tearing off the roof and torching the vehicle.
Preliminary reports say it could have been a bomb - possibly a targeted elimination.
Russia’s “mystery explosions” streak… https://t.co/h2d9nmn5uu pic.twitter.com/tJQ7B3GVYg
இத்தாக்குதல், 2022-ஆம் ஆண்டு நடைபெற்று ரஷ்ய தேசியவாதியான அலெக்சாண்டர் டூகினின் மகள் தாரியா டூகினா கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பை நினைவுபடுத்துகிறது. அதுபோன்று, இது ஒருவரை குறிவைத்து செய்யப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மாஸ்கோவில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து நடந்த வெடிப்பு சம்பவங்கள், நகரத்தில் அதிகரிக்கும் நிலைமை மாறுதல்களை பற்றி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
🇷🇺🇺🇦PUTIN IGNORES TRUMP’S PLEA, LAUNCHES DEADLY DRONE STRIKES
— Mario Nawfal (@MarioNawfal) April 25, 2025
Hours after Trump called for Putin to stop striking Ukraine, Russia hit Kharkiv with kamikaze drones - killing at least 3.
At least 7 others died in Pavlohrad, Donetsk, and Kherson, including a child and a… https://t.co/2MGWrQxJuC pic.twitter.com/ZrudwfbbYh
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Moscow car bomb blast, Yaroslav Moskalik death, Putin defence general killed, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், Car explosion near Kremlin, Moscow terror attack, ஜெனரல் யாரோஸ்லாவ், Putin ally killed in blast, Russia Ukraine war latest news