நெருங்கும் 3வது அலை.. தனக்கு போடப்பட்ட தடுப்பூசி குறித்த உண்மையை வெளிப்படுத்திய ரஷ்ய ஜனாதிபதி புடின்
கொரோனாவின் 3வது அலை நெருங்கும் நிலையில் தனக்கு போடப்பட்ட தடுப்பூசி குறித்த உண்மையை ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி புடின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் என இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
ஆனால், தடுப்பூசி எந்த நிறுவனம் தயாரித்தது என்பது குறித்த விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி போட்டுக்கொண்ட தடுப்பூசி எந்த நிறுவனம் தயாரித்தது என்பது மர்மமாகவே இருந்த நிலையில், தற்போது புடின் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
புடினின் வருடாந்திர தொலைக்காட்சி கேள்வி பதில் அமர்வின் போது அவரிடம் தடுப்பூசி குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த புடின், தனக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி தான் போடப்பட்டதாக தெரிவித்தார்.
ரஷ்ய இராணுவத்தினருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, தலைமை தளபதியான நானும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.
நான் தடுப்பூசியை கட்டாயமாக்குவதை ஆதரிக்கமாட்டேன், தொடர்ந்து இந்த நிலைப்பாட்டிலே இருப்பேன் என புடின் உறுதியளித்தார்.