புடின் என் சிறந்த நண்பர் இல்லை.. ஏன் தெரியுமா? எலோன் மஸ்க்
விளாடிமிர் புடின் ”என்னை போர் குற்றவாளி என அழைத்தார், அவர் எனது சிறந்த நண்பர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்” என ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலோன் மஸ்க் கூறியுள்ளார்.
போர் குற்றவாளி
”விளாடிமிர் புடின் என்னை போர் குற்றவாளி என அழைத்தார், அவர் எனது சிறந்த நண்பர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்” என ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலோன் மஸ்க்(Elon musk) கூறியுள்ளார்.
ரஷ்ய தலைவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய ட்விட்டர் பயனருக்கு பதிலளிக்கும் போது எலான் மஸ்க் இந்த பதிலை அளித்துள்ளார்.
மேலும் அந்த ட்விட்டர் பயனர் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) முன்னர் தனது ட்வீட்டில் ”உக்ரைன் யாருக்கும் தேவையில்லை, சீக்கிரம் அது மறைந்துவிடும்" என பதிவிட்ட ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த பதிவில் எலான் மஸ்க்கை குறிப்பிட்டு, ரஷ்ய தலைவர்கள் மீண்டும் ஏன் அந்த தவறை செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் தீர்மானிக்கட்டும்
"உக்ரைனுக்கு உதவியதற்காக புடின் என்னை போர்க்குற்றவாளி என்று அழைத்தார். அதனால் அவர் என்னுடைய சிறந்த நண்பர் அல்ல. மக்கள் இதனை பற்றி தாங்களாகவே முடிவு செய்யட்டும்" என்று திரு மஸ்க் தனது பதிலில் கூறியுள்ளார்.
டெலிகிராப் வெள்ளிக்கிழமை தனது அறிக்கையில், ட்விட்டர் இனி ரஷ்ய அரசு ஊடக நிறுவனங்களின் வரம்பைக் கட்டுப்படுத்தாது என்று கூறியது.
எலான் மஸ்க் ரஷ்யா-உக்ரைன் போர் பற்றி அடிக்கடி தனது கருத்துக்களைக் கூறினார். ரஷ்யர்களுக்கு சாதகமாக கருதப்படும் ஒரு சமாதான திட்டத்தை பரிந்துரைத்ததற்காக புடினின் உதவியாளர்களால் அவர் பாராட்டப்பட்டார்.
ஆனால் கடந்த ஜனவரியில்,எலான் மஸ்க்கின் நிறுவனமான SpaceX 20,000க்கும் அதிகமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை உக்ரைனின் ராணுவத்திற்கு வழங்கியதை அடுத்து, ரஷ்ய தொலைக்காட்சி அவரை
”போர் குற்றவாளி” என விமர்சித்தது.