இனி போரே கிடையாது... இதை மட்டும் செய்தால் போதும்: புடின் நிபந்தனை
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, புடின் மற்ற ஐரோப்பிய நாடுகள் மீதும் போர் தொடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஆனால், இதை மட்டும் செய்தால் போதும், இனி போரே இருக்காது என்கிறார் புடின்!
புடினுடைய நிபந்தனை
அப்படி என்ன செய்யவேண்டும் என்கிறார் புடின்? வேறு ஒன்றுமில்லை, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை மரியாதையுடன் நடத்தினால் போதும், உக்ரைன் போருக்குப் பின் வேறு போரே இருக்காது என்று கூறியுள்ளார் புடின்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடினிடம், பிபிசி தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், இனி வேறு எந்த நாட்டையாவது ஊடுருவும் திட்டம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த புடின், நீங்கள், அதாவது, மேற்கத்திய நாடுகள் எங்களை மரியாதையுடன் நடத்தினால், இனி போரே இருக்காது என்றும், நாங்கள் உங்களை எப்போதுமே மரியாதையுடன் நடத்தியுள்ளோம், அதேபோல நீங்களும் எங்களுக்கு உரிய மரியாதையை அளித்தால் போதும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா ஐரோப்பிய நாடுகளைத் தாக்க திட்டமிடப்படுவதாக கூறப்படுவதும் அர்த்தமற்றது அல்லது அபத்தமானது என்று கூறி அதை நிராகரித்துள்ளார் புடின்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |