ரஷ்யாவின் புதிய சாத்தான் 2 ஏவுகணை: உலகில் இதற்கு நிகரான எதுவும் இல்லை - விளாடிமிர் புடின்
ரஷ்யாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் RS-28 சர்மட் ஏவுகணை போர் பணியில் இல்லை என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டார்.
சாத்தான் 2 ஏவுகணை
ரஷ்யாவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளில் ஒன்று RS-28 சர்மட் (Sarmat). கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையை, மேற்கத்திய ஆய்வாளர்கள் சாத்தான் 2 என்று அழைக்கின்றனர்.
பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை 2018ஆம் ஆண்டு புடின் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 2023யில், ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் RS-28 சர்மட் செயல்பாட்டிற்கு வந்ததாகவும், போர் கடமைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியது.
பின்னர் 2024 செப்டம்பரில், RS-28 சர்மட் சோதனைகளின்போது வெடித்துச் சிதறியதாகவும், செயற்கைகோள் படங்களில் ஒரு பெரிய பள்ளம் தெரிந்ததாகவும் திறந்த மூல ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட சோதனை குறித்து கருத்து தெரிவிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. 
அக்டோபர் மாத தொடக்கத்தில் ரஷ்ய பியூரெவெஸ்ட்னிக் அணுசக்தியால் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் கப்பல் ஏவுகணையை சோதித்ததாக ஞாயிற்றுக்கிழமை விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்தார்.
சக்தி வாய்ந்தது
மேலும் தனது பயணத்தின்போது காயமடைந்த வீரர்களிடம் பேசிய அவர், போஸிடான் அணுசக்தியால் இயங்கும் சூப்பர் தன்னாட்சி டார்பிடோவை விட சர்மட் குறைவான சக்தி வாய்ந்தது என்றும், அதனை சோதித்ததாகவும் புடின் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியானது.
இந்த நிலையில், புதிய RS-28 சர்மட் ஏவுகணை இன்னும் போர் பணியில் நிலைநிறுத்தப்படவில்லை; ஆனால் அது விரைவில் நிலைநிறுத்தப்படும் என்று மாஸ்கோவில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையில், காயமடைந்த வீரர்களிடம் புடின் கூறியுள்ளார்.
அத்துடன் இதனை வெல்ல முடியாது என்றும், உலகில் இதற்கு நிகரான எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும் ஏவுகணையின் சோதனைப் பதிவு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |