புற்றுநோய்க்கு தீர்வு காணும் ரஷ்யா! நெருங்கிவிட்டோம் என தெரிவித்த விளாடிமிர் புடின்
புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் தங்கள் விஞ்ஞானிகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் மருந்து
கொடூர நோயான புற்றுநோய்க்கு தடுப்பு மருந்துகளை உருவாக்க உலகின் பல நாடுகள் தீவிர முயற்சில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோ மன்றத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி குறித்து பேசினார்.
@Reuters
புடின் நம்பிக்கை
அவர் கூறுகையில், 'புதிய தலைமுறையின் புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் Immunomodulatory மருந்துகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம்.
விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும். அவை தனிப்பட்ட சிகிச்சை முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின்போது ஸ்புட்னிக் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
@Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |