பல காலங்களாக கைவிடப்பட்ட விளாடிமிர் புடினின் ரகசிய தாயார்: எதுவும் உண்மை இல்லை என வாதம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தமது சொந்த மகன் என பல காலங்களாக கூறி வந்துள்ள பெண்மணி ஒருவர் 97வது வயதில் மரணமடைந்துள்ளார்.
விளாடிமிர் புடின் தான் தமது மகன்
கடந்த பல ஆண்டுகளாக விளாடிமிர் புடின் தான் தமது மகன் என கூறி வந்துள்ளார் வேரா புடினா. திருமணமான ஒரு நபருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தாம் கருவுற்றதாகவும், அந்த மகனே விளாடிமிர் புடின் எனவும் வேரா தெரிவித்துள்ளார்.
Image: Wiki Commons
ஆனால், தமது பிறப்பு அப்படியானதல்ல என விளாடிமிர் புடின் மொத்தமாக மறுத்துள்ளார். 10 வயதில் விளாடிமிர் புடினினை தாம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்ததாகவும், வளர்ப்பு தந்தையின் புறக்கணிப்பு மற்றும் துன்புறுத்தலில் இருந்து விடுபடவே ஜார்ஜியாவில் உள்ள Metekhi நகரில் இருந்து புடினை வெளியேற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது மகன் வோவா என்கிற புடின் ரஷ்யாவில் உள்ள Ochyor கிராமத்தில் அவனது தாத்தா பாட்டியுடன் வாழட்டும் என அப்போது அனுப்பி வைத்ததாக கூறுகிறார் வேரா. வேராவின் கைவசம் உள்ள புகைப்படங்களில் புடினின் சிறுவயது தோற்றம் காணப்பட்டாலும், அது அனைத்தும் பொய் என்றே மக்களில் சிலர் கூறுகின்றனர்.
இந்த வாரம் மரணமடைந்த வேரா, தமது மகனை ஒருமுறையேனும் சந்திக்காமல் தனக்கு மரணம் நேராது என அடிக்கடி கூறி வந்துள்ளார். புடினை அவரது வளர்ப்பு தந்தை ஒருபோதும் அடித்து துன்புறுத்தியது இல்லை, மாறாக அவர் மீதான வெறுப்பை காண்பித்துள்ளார்.
ரஷ்ய தம்பதியின் மூன்றாவது மகனாக
சிறுவன் வோவாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என அடிக்கடி கூறி வந்துள்ளார். குளிர் காலத்தில் பல முறை வோவா வீட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார். ஆனால் இரக்க குணம் கொண்ட அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இரவு தங்க வைத்துள்ளனர்.
@getty
Metekhi நகரில் பதிவாகியிருந்த ஆவணங்களில், விளாடிமிர் புடின் அங்குள்ள பாடசாலையில் 1959ல் பதிவு செய்யப்பட்டதாகவும், ஜார்ஜியாவில் தான் பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், புடினின் சிறுவயது தொடர்பில் வெளியாகியுள்ள உத்தியோகப்பூர்வ தரவுகளில், அவர் 1952ல் ரஷ்ய தம்பதியின் மூன்றாவது மகனாக St Petersburgல் பிறந்துள்ளார். அவரது பெற்றோர் 1990களில் தான் இறந்துள்ளனர்.
மேலும், தமது சகோதரர்கள் இருவரும் இளம் வயதிலேயே மரணமடைந்துள்ளதாக புடினே பல முறை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த ஜார்ஜியா பெண்மணி தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றே புடின் தெரிவித்துள்ளார்.