பிரித்தானியாவை கடலில் மூழ்கடிக்கவல்ல நீர்மூழ்கிக் கப்பலை ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள புடின்...
கதிரியக்க சுனாமியை உருவாக்கவல்ல நீர்மூழ்கிக் கப்பலை புடின் ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்கவல்லது என கூறப்படுகிறது.
முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
image: social media/ east2west news
உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில்தான் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமைந்துள்ளன. அந்த நீர்மூழ்கிக் கப்பல், கதிரியக்க சுனாமியையே உருவாக்க வல்லதாகும்.
புடின் ஆதரவாளர் ஒருவர் அந்த நீர்மூழ்கியைக் குறித்துக் கூறும்போது, அது முழு பிரித்தானியாவையே கடலின் ஆழத்தில் மூழ்கடிக்கும் திறன் கொண்டது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: social media
Image: Getty Image