ஈரான் ஜனாதிபதியுடன் பேசிய விளாடிமிர் புடின்: என்ன கூறினார்?
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு உதவத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை தொடர்பில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
மத்தியஸ்தம்
அந்த உரையாடலில், "மோதலுக்கு ஒரு அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வைக் காண்பதற்கு மேலும் உதவுவதற்கும், மத்திய கிழக்கில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை எட்டுவதற்கான முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தனது தயார்நிலையை விளாடிமிர் புடின் வலியுறுத்தினார்" என பேசப்பட்டதாக கிரெம்ளின் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னதாக, அமைதிக்கான இராஜதந்திர வழியைப் பின்பற்றுமாறு உலகத் தலைவர்கள் ஈரான், அமெரிக்கா இரு தரப்பினரையும் உடனடியாக வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |