ரஷ்யாவை போரில் தள்ளியது அவர்கள் தான்: முடிவுக்கு கொண்டுவர காலக்கெடு - புடின் கூறிய விடயம்
எங்களுக்கு எதிரான இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு
உக்ரைனுக்கு எதிரான சண்டையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ICBM ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர் பிரிவின் போர் தயார்நிலையை ரஷ்யா சோதனை செய்து வருகிறது.
அதே சமயம் ரஷ்யாவிற்கு தனது ராணுவ படைகளை வடகொரியா அனுப்பியதாக தென்கொரியா கூறியது.
இந்த நிலையில் தான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
போர் நிறுத்தம்
தனது அதிகாரப்பூர்வ இல்லமான நோவோ ஓகாரியோவோவில் புடின் அளித்த நேர்காணலில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், "உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும். ரஷ்யாவை போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு தள்ளியது. ரஷ்ய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்ப படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும். போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம்.
உக்ரைன் ராணுவம், துல்லியமான ஆயுத விநியோக அமைப்புகளை சொந்தமாக கையாள முடியாது. சமாதான பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின் வாங்குகிறது. பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது. இந்த அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அல்ல. ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம் அமெரிக்காதான்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |