அழகிய இளம்பெண்ணைப் பார்த்து திகைத்து நின்ற புடின்: அவரே சொன்ன விடயம்...
அழகிய இளம்பெண் ஒருவரைப் பார்த்து, உங்களைப் பார்த்து நான் திகைத்துப்போனேன் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்!
புடினால் அழகிய இளம்பெண் என பாராட்டப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ஐரினா (Irina Sokirko, 38).
ஐரினா ஒரு ஊடகவியலாளர். உக்ரைன் போர் நடக்கும் இடத்துகே சென்று செய்தி சேகரித்ததுடன், ரஷ்யப் படைவீரர்களுக்கு உதவுவதற்காக 47 மில்லியன் பவுண்டுகள் வரை சேகரிக்க உதவியவர் அவர்.
Image: VALERY SHARIFULIN/KREMLIN/POOL/EPA-EFE/REX/Shutterstock
புடின் பாராட்டு
போர் நடக்கும் முன்னணியத்துக்கே சென்று செய்தி சேகரித்த ஐரினா, வெடிகுண்டுச் சிதறல்கள் காலில் பாய்ந்ததால் காயமடைந்தார்.
கிரெம்ளின் மாளிகையில் ஐரினாவுக்கு வீரப்பதக்கம் அளித்து பாராட்டினார் புடின்.
Image: 1tv.ru/east2west news
அப்போது அவர் ஐரினாவைப் பார்த்து, எவ்வளவு அழகான இளம்பெண் நீங்கள், தைரியமாக போர் நடக்கும் முன்னணியத்துக்கே சென்ற உங்களைப் பார்த்து நான் திகைத்துப்போய்விட்டேன் என்று கூறினார் புடின். அதைத்தான், ஊடகங்கள், அழகிய இளம்பெண்ணைப் பார்த்து திகைத்து நின்ற புடின் என்ற தலைப்பில் செய்தியாக்கியுள்ளன!
Image: 1tv.ru/east2west news