இந்தியா, சீனாவை அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய சூழலில் புடின்!
கச்சா என்னை ஏற்றுமதிக்காக இந்தியா மற்றும் சீனாவை அதிகமாக சார்ந்து இருக்க வேண்டிய சூழலுக்கு ரஷ்யா வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெயை தடைசெய்யும் பட்சத்தில், கச்சா எண்ணெய்யின் ஏற்றுமதிக்காக ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா மற்றும் இந்தியாவை இன்னும் அதிகமாக சார்ந்து இருக்க வேண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அதன்மூலம் ஆசியாவில் உள்ள வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யமுடியும் என நம்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒரு பகுதி தடையைத் தொடர ஒப்புக்கொண்டதனால், புடினுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் ஏற்றுமதி வருவாய் இழக்க நேரிடும்.
உணவு பற்றாக்குறையை தீர்க்க உக்ரைன் ரஷ்யா இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை: அன்டோனியோ குட்டரெஸ் கருத்து
ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த ஒரு எண்ணெய் பிராண்டான ரஷ்யாவின் யூரல்ஸ் (Urals) கச்சா எண்ணெயை இறுதியில் கைவிடப்படும் நிலையில், இந்தியா, சீனா போன்ற வர்த்தகர்கள் ரஷ்யாவுக்கு தேவைப்படுகின்றன.
ஏனென்றால், இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிக கந்தக வகை எண்ணெயைக் கையாளும் அதிநவீன செயலாக்கம் மற்றும் கலப்புத் திறன்கள் இல்லாத நாடுகளில் தரத்தை பெரிய அளவில் எளிதில் சுத்திகரிக்க முடியாது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
யூரல்ஸ் எண்ணெயை செயலாக்கக்கூடிய சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்ட சீனா மற்றும் இந்தியாவை இது கூடுதல் பீப்பாய்களை எடுக்க வழிவகுக்கும்.