உக்ரைன் துருப்புகளை எங்கள் இராணுவம் முடித்துவிடும்! ஜனாதிபதி புடின் சபதம்
கீவில் கிரெம்ளினுக்கு உகந்த ஆட்சியை நிறுவுவது மாஸ்கோவின் சமீபத்திய விருப்பம் என்பதற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பு விடுத்துள்ளார்.
போர்நிறுத்தத்திற்கு அழுத்தம்
மூன்று ஆண்டுகளாக உக்ரைன், ரஷ்யா போர் நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் போர்நிறுத்தத்திற்கு கடுமையான அழுத்தம் கொடுத்து வருகிறார்.
அவர் பதவிக்கு திரும்பியதில் இருந்து அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதாக கூறி ட்ரம்ப் எடுத்த முடிவு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் ஒரு இடைக்கால நிர்வாகம் நிறுவப்பட வேண்டும் என அழைப்பு விளாடிமிர் புடின் (Vladimir Putin) விடுத்துள்ளார்.
புடின் சபதம்
அத்துடன் உக்ரைன் துருப்புகளை தனது இராணுவம் முடித்துவிடும் என்று சபதம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய புடின், "ஐ.நாவின் அனுசரணையில், உக்ரைனில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமெரிக்கா, ஐரோப்பா, மாஸ்கோவின் நட்பு நாடுகளுடன் விவாதிக்க முடியும்.
எதற்காக இது? மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு திறமையான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுக்கும் ஒரு ஜனநாயக ஜனாதிபதித் தேர்தலை ஏற்பாடு செய்ய மற்றும் பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தம் குறித்து இந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, சட்டப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடத்தான்" என தெரிவித்தார்.
ஆனால், ஐ.நா நடத்தும் நிர்வாகத்திற்கான புடினின் அழைப்பை, ரஷ்யத் தலைவர் புடினின் சமாதான ஒப்பந்தத்தை தாமதப்படுத்துவதற்கான சமீபத்திய சூழ்ச்சி என்று நிராகரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |