இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது... எச்சரிக்கும் புடினுடைய ’ஆமாம் சாமி’: பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல்
புடினுடைய ‘ஆமாம் சாமி’ என்று அழைக்கப்படும் ஒருவர், அவர் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறி எச்சரித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்தவர் Dmitry Medvedev (56).
ஜனாதிபதி பதவியிலிருக்கும்போது புடினை விட மென்மையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் Medvedev, இப்போது காரசாரமான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.
அழிவு நெருங்கிவிட்டது என்னும் பொருளில், இறுதி அழிவின் குதிரை வீரர்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்று கூறி மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் Medvedev.
ஆனால், Medvedev ரஷ்ய ஜனாதிபதி பதவிக்கு அடிபோடுகிறார் என்கிறார் ரஷ்யாவின் முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Dmitry Gudkov. புடின் பதவியிலிருந்து அகற்றப்பட்டால், அந்த இடம் தனக்கு கிடைக்கும் என அவர் எண்ணுவதால்தான் Medvedev இப்படியெல்லாம் செய்வதாக அவர் தெரிவிக்கிறார்.
புடின் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதால், Medvedevஐ ஊடகங்கள் புடினுடைய ’ஆமாம் சாமி’ என விமர்சித்துள்ளன.