இந்த ஒரு காரணம்... ரஷ்ய பெரு முதலாளிகளால் விளாடிமிர் புடின் பதவிக்கு ஆபத்து வரலாம்
ரஷ்யாவில் விளாடிமிர் புடினை ஆதரிக்கும் பெரு முதலாளிகளின் வருவாய் பாதிக்கப்பட்டால், அதுவே புடினின் ஆட்சி முடிவுக்கு காரணமாக அமையும் என்று முன்னாள் அமெரிக்க தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலர் மீது தடைகள்
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் தாமதப்படுத்தினால், அதனால் அதிக இழப்பை புடினை ஆதரிக்கும் பெரும் முதலாளிகள் இன்னமும் எதிர்கொள்வார்கள்.
இது ஒரு கட்டத்தில் புடினுக்கு எதிராக திரும்பும் என்றே கூறுகின்றனர். 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா ஊடிருவலை முன்னெடுத்ததை அடுத்து பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவின் பெரு முதலாளிகள் பலர் மீது பொருளாதார தடைகளை விதித்தது.
இதனால் பலர் பயணத் தடைகளை எதிர்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளில் அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. அதாவது பலரது சர்வதேச ஒப்பந்தங்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தற்போதும் ரஷ்ய பெரு முதலாளிகள் மீதான தடைகள் அமுலில் உள்ளது. இதுவே விளாடிமிர் புடினின் பதவிக்கு வேட்டுவைக்கும் நிலையை ஏற்படுத்தப்போவதாக தெரிவிக்கின்றனர்.
தங்கள் ஆதரவை விலக்கி
இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் போரால், கடும் பொருளாதார நெருக்கடியை ரஷ்ய பெரு முதலாளிகள் எதிர்கொள்ளலாம். தற்போது உக்ரைன் படைகளால் ரஷ்யாவும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவராலம் மேலும் தாமதப்படுத்தினால், பெரு முதலாளிகள் கண்டிப்பாக தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
மட்டுமின்றி, லண்டன் போன்ற ஐரோப்பிய நகரங்களில் தங்கள் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றால் புடினை ஆதரிக்கும் பெரு முதலாளிகள் தங்கள் நிலை குறித்து விவாதிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
போர் முடிவுக்கு வராமல் ரஷ்ய பெரு முதலாளிகள் மீதான தடைகள் நீக்கப்படாது. இதனால் ஜனாதிபதி புடினுக்கு இவர்கள் அழுத்தம் அளிக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |