புடின் கைது செய்யப்படும் சாத்தியம்; ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வரவில்லை
இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்காக ரஷ்ய அதிபருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து, வெளிநாட்டில் இருக்கும் போது புடின் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 9-10 திகதிகளில் புதுதில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
AFP
இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் புடினின் பங்கேற்பின் வடிவம் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று பெஸ்கோவ் கூறினார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கூட காணொளி மூலம் புதின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vladimir Putin, G20 Summit, Russia, India, G20 Summit India, G20 summit event in India