ட்ரம்பை சந்தித்தது புடின் அல்ல - ரஷ்ய ஜனாதிபதி குறித்து பரவும் வதந்திகள்
விளாடிமிர் புடின் மற்றும் டொனால்டு ட்ரம்ப் இடையேயான அலாஸ்கா சந்திப்பு குறித்து இணையத்தில் பரபரப்பான வதந்திகள் உருவாகியுள்ளன.
பலர், புடின் அலாஸ்கா வந்திறங்கவே இல்லை என்றும், தனக்கு பதிலாக தன்னைப் போலவே இருக்கும் வேறொருவரை (Body Double) அனுப்பியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அதற்கு ஆதாரமாக, வந்தவர் புடின் போலவே இல்லை என சிலர் கூறுகின்றனர்.
அவரது முகம் சற்று பருமனாகவும், நடையும் சிரிப்பும் வழக்கமான புடினை போலவே இல்லை என்றும் விமர்சித்துள்ளனர்.
குறிப்பாக, புடின் வழக்கமாக தனது வலது கை நகராமல் நடக்கும் 'gunslinger gait' எனப்படும் நடையை இவர் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.
இன்னும் சிலர், இவர் உண்மையான புடின் அல்ல, இவர் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியாக காணப்பட்டதாக கூறியுள்ளனர்.
இந்த வதந்திகள், புடின்-ட்ரம்ப் சந்திப்பின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இணையத்தில் பரவிவருகிறது. ஆனால், இதற்கான அதிகாரபூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Putin body double Alaska, Trump Putin summit 2025, Putin doppelganger theory, Jovial Putin conspiracy, Gunslinger gait Putin, fake Putin, Putin Trump Alaska meeting, Putin not real Alaska, Putin body double, Putin send a body double to meet Trump