வெளிநாடொன்றில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்
கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
திடீரென கைது செய்யப்பட்ட இந்தியர்கள்
கத்தாரில் உள்ள Dahra Global என்னும் நிறுவனத்தில் பாதுகாப்பு சேவை வழங்கும் பணியில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், அவர்களை கத்தார் அதிகாரிகள் கைது செய்து தனிமைச் சிறையில் அடைத்தார்கள். அவர்கள் என்ன காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து கத்தார் அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார்?
கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பீரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் ஆவர்.
இதற்கிடையில், இந்திய தூதர் தீபக் மிட்டல் முதலான இந்திய அதிகாரிகள் கத்தார் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தனிமைச் சிறையிலடைக்கப்பட்டிருந்த இந்தியர்கள், இரண்டு பேர் அடைக்கப்படும் சிறை அறைகளில் தங்கள் சக இந்தியர்களுடன் அடைக்கப்பட்டார்கள்.
திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
இந்நிலையில், அந்த எட்டு இந்தியர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கத்தார் அரசு அறிவித்தது.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது.
அதைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
India Today NE
முக்கிய திருப்பம்
தற்போது, இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் நீதிமன்றம், இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலிக்க இருப்பதாக அந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |