தங்கமென ஜொலிக்கும் உலக கோப்பை இறுதிப் போட்டி மைதானம்: புகைப்படம்
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் உலக கோப்பை இறுதிப் போட்டி, கத்தார் லூசைல் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், மைதானம் தங்கமென ஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை இறுதிப் போட்டி
உலக கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், கைலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியும் நாளை(18ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை) கத்தார் லுசைல் மைதானத்தில் பலப்பரிட்சை செய்யவுள்ளனர்.
பிரான்ஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருப்பதால், பிரான்ஸ் கோப்பை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Lionel Messi & Kylian mbappe-லியோனல் மெஸ்ஸி & கைலியன் எம்பாப்பே
அதே சமயம் கால்பந்து ஜாம்பவான் என்று உலக கால்பந்து ரசிகர்களால் போற்றப்படும் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி-க்கு, இதுவே உலக கோப்பையில் இறுதி போட்டி என்பதால், கோப்பை வென்று அர்ஜென்டினா வெற்றி மகுடம் சூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜொலிக்கும் மைதானம்
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக உருவாக்கப்பட்ட மைதானங்களில், லுசைல் மைதானம் முதன்மை மைதானமாக பார்க்கப்படுகிறது, இந்த மைதானத்தில் வைத்தே உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
? Sunday will be A Night to Remember!
— FIFA World Cup (@FIFAWorldCup) December 17, 2022
Before the #Qatar2022 Final, we'll have live performances from #FIFAWorldCup Soundtrack stars Davido and Aisha, Ozuna and Gims, and Nora Fatehi, Balqees, Rahma Riad and Manal ? pic.twitter.com/DUQSkNqtYj
இந்நிலையில் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மைதானம் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றியை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டிக்காக கூடுதலாக மின்னொளிகளால் ஜொலிக்க வைக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் தங்கமென மின்னும் இந்த லுசைல் மைதானத்தில் இறுதிப் போட்டியின் போது இசை நட்சத்திரங்களான டேவிடோ மற்றும் ஆயிஷா, ஓஸ்னா மற்றும் ஜின்ஸ், மற்றும் நோரா ஃபதேஹி, பில்கிஸ், ரஹ்மா ரீட் மற்றும் மனால் ஆகியோரின் நேரலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என FIFA தெரிவித்துள்ளது.