இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சட்ட நடவடிக்கை: பதிலடி கொடுப்பது கத்தாரின் உரிமை
கத்தார் அதிகாரிகள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் மீது தாக்குதல்
ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து சமீபத்தில் கத்தார் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் 5 ஹமாஸ் அதிகாரிகள் மற்றும் கத்தார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் உலக அளவில் ஹமாஸ் - இஸ்ரேல் போரின் முக்கிய மத்தியஸ்தராக கத்தார் இருப்பதுடன், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்து வருகிறது.
நெதன்யாகு மீது சட்ட நடவடிக்கை
இந்நிலையில் கத்தார் அதிகாரிகள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதா என்பதை விசாரிக்கும் படி சட்ட வல்லுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, இஸ்ரேலின் இந்த தாக்குதலை அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் உரிமை கத்தாருக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |