குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படையாகவே மன்னிப்பு கோரிய ராணியார் மார்கரேத்
தமது முடிவின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டதாகவும், இருப்பினும் தமது முடிவு நீண்ட காலத்திற்கு பயனைத் தரும்
எதிர்காலத்தில் ராஜகுடும்பம் மீது பொதுமக்களுக்கு தவறான கருத்து ஏற்பட்டுவிடக் கூடாது
மிகவும் கடினமான முடிவை எடுத்தமைக்கு தம்மை மன்னிக்க வேண்டும் என, குடும்ப உறிப்பினர்களிடம் கோரியுள்ளார் டென்மார்க் ராணியார் மார்கரேத்.
டென்மார்க் ராணியாரின் பேரப்பிள்ளைகளுக்கு இளவரசர்கள் பட்டம் அளிக்கப்படாது எனவும், தற்போது அளிக்கப்பட்டிருக்கும் அவ்வாறான பட்டம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் ராணியார் மார்கரேத் அறிவித்திருந்தார்.
@reuters
எதிர்காலத்தில் ராஜகுடும்பம் மீது பொதுமக்களுக்கு தவறான கருத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலையே, இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ராணியாரின் இந்த முடிவு குடும்ப உறிப்பினர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ராணியாரின் முடிவால் இளவரசர் நிகோலாய்(23), இளவரசர் பெலிக்ஸ்(20), இளவரசர் ஹென்ரிக்(13), மற்றும் இளவரசி அதீனா(10) ஆகியோர் தங்கள் பட்டங்களை இழந்தனர். மேலும், 2023 ஜனவரி 1ம் திகதி முதல் அவர்கள் வெறும் பிரபுக்களாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள் எனவும் ராணியார் மார்கரேத் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார்.
@epa
இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராணியார், தமது முடிவின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தமது முடிவு நீண்ட காலத்திற்கு பயனைத் தரும் எனவும், அதில் தமக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இளவரசர் ஜோகிம் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மேரி ஆகியோரின் உறவு விரிசலைக் கண்டுள்ளதாகவும், ஆனால் ராணியார் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை எனவும், இதுவும் குடும்ப விவகாரம் தானே எனவும் அவர் வருத்தமுடன் பதிவு செய்துள்ளார்.
@shutterstock
மேலும், ராணியார் தமது பிள்ளைகளை அவர்களின் பட்டங்களை பறித்துள்ளதன் மூலம் தண்டித்துள்ளதாகவும் இளவரசர் ஜோகிம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்தே, ராணியார் மார்கரேத் அறிக்கை ஒன்றின் மூலம் தமது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
@kongehuset