ராணியாரின் செங்கோலில் இருக்கும் வைரம் எங்கள் சொத்து... திருப்பித் தர கேட்கும் நாடு
கல்லினன் வைரமானது பிரித்தானிய அரச குடும்பத்தினருக்கு தென்னாப்பிரிக்காவால் பரிசாக அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க மக்கள் ராணியாரின் செங்கோலில் பதிக்கப்பட்டுள்ள வைரம் தங்களுக்கு சொந்தம் எனக் கூறி கையெழுத்திட்டுள்ளனர்.
பிரித்தானிய ராணியாரின் செங்கோலில் பதிக்கப்பட்டுள்ள வைரம் தங்களுக்கு சொந்தமானது எனவும், அதை தங்களுக்கு திருப்பித் தர வேண்டும் எனவும் தென்னாப்பிரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய வைரம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிரிக்காவின் பெரிய நட்சத்திரம், அல்லது முதலாம் கல்லினன் என்ற வைரமானது பிரித்தானிய அரச குடும்பத்தினருக்கு தென்னாப்பிரிக்காவால் பரிசாக அளிக்கப்பட்டது.
@bbc
1905ல் குறித்த வைரம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிரித்தானிய ஆட்சியின் கீழ் அப்போது தென்னாப்பிரிக்கா இருந்ததால் அந்த வைரம் பிரித்தானிய அரச குடும்பத்தினருக்கு பரிசளிக்கப்பட்டது.
தற்போது அந்த வைரமானது ராணியாரின் செங்கோலில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராணியார் காலமானதை அடுத்து, தங்களுக்கு சொந்தமான அந்த வரைம் திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ராணியார் மறைவை அடுத்து பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருவதுடன், பல நாடுகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த லண்டன் புறப்பட உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகள் முடியாட்சியின் பங்கு மற்றும் பிரித்தானிய காலனித்துவம் கடந்த காலத்தில் தங்கள் நாடுகளில் ஆற்றிய பங்கு பற்றிய விவாதங்களில் ஏற்பட்டுள்ளன.
@getty
தென்னாப்பிரிக்காவில், ஆப்பிரிக்காவின் பெரிய நட்சத்திரம் என கூறப்படும் அந்த வைரம் மற்றும் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மற்ற விலையுயர்ந்த கற்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து ஊடகங்களில் ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மட்டுமின்றி, ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னாப்பிரிக்க மக்கள் இதுவரை ராணியாரின் செங்கோலில் பதிக்கப்பட்டுள்ள வைரம் தங்களுக்கு சொந்தம் எனக் கூறி கையெழுத்திட்டுள்ளனர்.
@capetowndiamondmuseum
ராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பதில், நாட்டின் ஜனாதிபதி Cyril Ramaphosa குறித்த வைரத்தை மீட்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1907ல் ஏழாம் எட்வர்ட் மன்னருக்கு குறித்த வைரமானது பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர் குறித்த வைரமானது 9 பெரிய கற்களாகவும் 96 சிறிய கற்களாகவும் வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.