அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள்... நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா அவசர எச்சரிக்கை
லெபனான் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறும், ஆயுத மோதல்கள் நடந்துவரும் பகுதிகளை நெருங்குவதைத் தவிர்க்குமாறும் சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சவுதி அரேபியா அறிவுறுத்துகிறது
லெபனானில் உள்ள சவுதி தூதரகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், லெபனானில் எந்தப் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்று தனது குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்துகிறது என்று குறிப்பிடவில்லை.
@reuters
அத்துடன், லெபனானுக்கான சவுதி பயணத் தடையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக குவைத் அரசாங்கமும், லெபனானில் உள்ள குவைத் மக்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு இடையூறுகள் ஏற்படும் பகுதிகளைத் தவிர்க்கவும் சனிக்கிழமை அதிகாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஆனால், குவைத் மக்கள் வெளியேற வேண்டும் என குறிப்பிடவில்லை. மேலும், ஆகஸ்டு 1ம் திகதி அத்தியாவசிய தேவை ஏற்படுமாயின் மட்டும் லெபனான் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானியர்களுக்கு ரிஷி சுனக் அரசாங்கம் அறிவுறுத்தியது.
@AFP
மட்டுமின்றி, ஜூலை 29ல் Ain el-Hilweh முகாமுக்கு வெளியே, வெடித்த மோதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் போராளிகள் என்றே கூறப்படுகிறது. Ain el-Hilweh முகாமில் சுமார் 80,000 பாலஸ்தீனிய அகதிகள் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |