தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புயல்: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உட்பட இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
14 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற டிசம்பர் 3-ம் திகதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் இன்று, 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |