தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை: வானிலை மையம் அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
8 மாவட்டங்களில் மழை
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 29 ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து டிசம்பர் முதல் வாரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.
இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று(நவ 27) அடுத்த 3 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |