இந்தியா-சீனா நட்புறவாக இருக்க வேண்டும்! ஜெலென்ஸ்கியிடம் இதை கேட்க முடியுமா? லாவ்ரோவ் பேச்சு
இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றே ரஷ்யா விரும்புகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா-ரஷ்யா
வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியாவும் சீனாவும் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
ரைசினா(Raisina) உரையாடலில் சீன-இந்தியா மற்றும் சீன-ரஷ்யா உறவுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லாவ்ரோவ், சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளுமே ரஷ்யாவுடன் சிறந்த உறவை கொண்டுள்ளனர். அதே சமயம் தனது முன்னோடிகள் ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இந்த இரண்டு பெரிய நாடுகளும் நண்பர்களாக இருக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்," எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ரஷ்யாவின் இருப்பு சிறப்பானதாக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் நேருக்கு நேர் விவாதத்தை விரும்ப மாட்டார்கள், மேலும் ரஷ்யா எப்போதும் மக்களை ஒருங்கிணைப்பதற்கு ஆதரவாக இருப்பதாகவும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர்
இந்த சந்திப்பின் போது உக்ரைன் போர் குறித்து பேசுகையில், அனைவரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா எப்போது தயாராக உள்ளது என்று கேட்கிறார்கள், ஆனால் உக்ரைன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது என்று யாரும் ஜெலென்ஸ்கியிடம் கேட்கவில்லை.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தான் கடந்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் இருக்கும் வரை பேச்சுவார்த்தை நடத்துவது கிரிமினல் குற்றமாக கருதும் ஆவணத்தில் கையெழுத்திட்டார், உங்களால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்க முடியுமா? என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Reuters