ஜப்பானில் தமிழக முதல்வரை உற்சாகமாக வரவேற்ற ரஜினி ரசிகர்கள்
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜப்பானில் ரஜினி ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் சுற்றுப்பயணம்
சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சென்றார். கான்சாய் விமான நிலையத்தில் இந்திய தூதர் நிகிலேஷ் கிரி முதல்வர் ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ஒசாகா நகருக்கு சென்ற அவரை, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் 'ஜப்பானுக்கு வருக வருக' ஏன் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜப்பானில் உள்ள பெருமளவிலான ரஜினிகாந்த் ரசிகர்கள், தங்கள் மன்றத்தின் மூலம் ரஜினி அரசியல் கருத்துக்களை கூறியதைத் தொடர்ந்து முதல்வருக்கு வரவேற்பு அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அழைப்பு விடுப்பு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூருக்கு 23ஆம் திகதி முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்.
அங்கு பல்வேறு நிறுவன தலைவர்களையும், அமைச்சர்களையும் முதல்வர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.