பெட்ரோல் இல்லாமல் நின்ற Rapido Bike.., இறங்க மறுத்த பயணியை அப்படியே தள்ளிச்சென்ற ஓட்டுநர்
பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ரேபிடோ பைக்கில் இருந்து இறங்க மறுத்த பயணியை பைக்கில் உட்கார வைத்தபடியே ரேபிடோ டிரைவர் தள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே சென்னை போன்ற பெரு நகரங்களில் கார், ஆட்டோ போன்றவற்றை ஒன்லைன் செயலி மூலம் புக் செய்து பயணிக்கிறார்கள். அதுவும், ரேபிடோ பைக்குகளில் கட்டணம் குறைவு என்பதால் மக்கள் அதையே அதிகமாக தேர்வு செய்கின்றனர்.
எங்கு நடந்தது
ஹைதராபாத்தில் உள்ள நபர் ஒருவர் பயணம் செய்வதற்காக Rapido Bike -யை புக் செய்கிறார். பின்னர் Rapido டிரைவர் அந்த புக்கிங்கை எடுத்து அந்த நபரை அழைத்துச் செல்கிறார்.
அப்போது, அந்த நபர் இறங்கும் இடம் வருவதற்கு முன்பாகவே பெட்ரோல் இல்லாமல் பைக் நின்று விட்டது. அந்த நேரத்தில் ரேபிடோ டிரைவர் அந்த நபரிடம், அருகில் தான் பெட்ரோல் பங்க் உள்ளது, அதுவரை நடந்து வாருங்கள் எனக் கூறுகிறார்.
ஆனால், அந்த நபர் என்னால் இறங்க முடியாது என்று கூறி பைக்கில் அப்படியே உட்கார்ந்திருக்கிறார். இதனால், வேறு வழியின்றி அந்த நபரை பைக்கில் அமர வைத்துக்கொண்டே ரேபிடோ டிரைவர் பைக்கை தள்ளி சென்றுள்ளார்.
A customer showed no empathy toward a Rapido rider and refused to walk even after the bike ran out of petrol. The bike taxi rider was seen pulling the bike along with the customer.#Rapido #RapidoRider #Hyderabad #BikeTaxi pic.twitter.com/2JAEtaf3PE
— Surya Reddy (@jsuryareddy) February 12, 2024
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |