சொந்த மரணத்தை போலியாக சித்தரித்து விட்டு சிறையிலிருந்து தப்பிய கைதி: காதலியோடு உல்லாச வாழ்க்கை!
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த குற்றவாளி தனது மரணத்தை போலியாக சித்தரித்து விட்டு சிறையிலிருந்து தப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் போலி மரணம்
தெற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த தபோ பெஸ்டர் என்ற 35 வயது நபர், கடந்த 2012 ஆண்டு பெண்களை துஷ்பிரோயகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் மூலம் 2 பெண்களோடு பழகி அவர்கள் இருவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
@aol.com
இதனை தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை பெற்று வந்த குற்றவாளி தபோ பெஸ்டர் சிறையில் தீப்பிடித்து இறந்து விட்டதாக கடந்த மே மாதம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@getty images
இதனிடையே எரிந்த உடலிலிருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகளை கொண்டு DNA சோதனை செய்யப்பட்ட போது, அது தபோ பெஸ்டரின் உடலில்லை என தெரிய வந்துள்ளது.
காதலியுடன் ஆடம்பர வாழ்க்கை
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தபோ பெஸ்டர் ஜோகன்ஸ் பெர்க் நகரிலுள்ள ஒரு ஆடம்பர வீட்டில் தனது காதலியோடு வசித்து வருதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
@News24
பொலிஸார் அங்கு செல்வதற்கு முன் தபோ பெஸ்டர் தனது காதலியோடு தன்சானியா நாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்த பொலிஸார் தன்சானியா நாட்டு காவல்துறையின் உதவியின் மூலம் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி அங்கிருந்து கென்யா செல்ல திட்டமிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
@mess
சிறையிலிருந்து பெஸ்டர் தப்பிக்க சிறை அதிகாரிகளின் சாத்தியமான ஈடுபாடு குறித்து பல கேள்விகளை அந்நாட்டு அரசு எழுப்பியுள்ளது. உள்ளூர் செய்திகளின்படி, பெஸ்டர் தப்பிய மங்காங் திருத்த மையத்திலிருந்து குறைந்தது மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த G4S பாதுகாப்பு நிறுவனத்தால் சிறை தனியாரால் நிர்வகிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அரசாங்கம் தற்போது அதிகபட்ச பாதுகாப்பு சிறையின் நிர்வாகத்தை கையகப்படுத்தியுள்ளது மற்றும் சிறையை நிர்வகிப்பதற்கான G4S ஒப்பந்தம் 2026 இல் காலாவதியாகும் போது புதுப்பிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.