4,000 மக்களை பலிகொண்ட நிலநடுக்கம்! இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது..உதவி கேட்கும் ஆப்கான் வீரர் ரஷீத் கான்
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பதிவிட்டுள்ளார்.
உயர்ந்த பலி எண்ணிக்கை
ஆப்கானிஸ்தான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு நிவாரணப் பணிகள் நடைபெறும்போதே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா கூறியது. பல ஆயிரம் வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன.

ஆப்கான் நிலக்கடுக்கத்தில் 2000 பேர் பலி! உலகக்கோப்பையில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் தருகிறேன் - இளம் வீரர் அறிவிப்பு
இந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலகக்கோப்பையில் கிடைக்கும் முழு ஊதியத்தையும் தருவதாக ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் அறிவித்தார்.
உதவி கேட்கும் ரஷீத் கான்
இந்த நிலையில் ரஷீத் கான் மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 'மொத்த கிராமங்களும் தரைமட்டம், 1000க்கும் மேற்பட்ட மக்களின் தலைக்கு மேல் கூரை இல்லை. அங்கு குளிர்காலம் வர இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் முயற்சிகளில் இணைந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்கொடை தருவதே ஒரே வழி' என தெரிவித்துள்ளார்.
#HeratEarthquake flattened entire villages, 1000s don’t have a roof over their head at a time where the harsh winter is only a month away. I call upon all the parties to join efforts and help provide shelter & other basic necessities to the victims. One way is to donate below… pic.twitter.com/UY5dhkJL8I
— Rashid Khan (@rashidkhan_19) October 12, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |