ரூ.2000 நோட்டுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கிகளில் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் ரூ.2000/- நோட்டுகள் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த மே 19-ம் தேதி, புழக்கத்தில் இருந்த ரூ2000/- நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி அதாவது நேற்று வரை நீட்டிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியது
செய்தியாளர்கள் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் “ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் ரூ.3.42 லட்சம் கோடி நோட்டுகள் கடந்த செப்டம்பா் 29-ம் தேதி வரை திரும்பப் பெற்றப்பட்டன.
நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, தற்போதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக் கணக்குகளில் வைப்பு வைக்கப்பட்டது. மற்றவை வங்கிகளில் பணமாக மாற்றிக் கொள்ளப்பட்டது.
ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.
அவகாசம் முடிவடைந்த இன்றுமுதல் (அக். 8) ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கிக்கு செல்ல இயலாதவர்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ2000 நோட்டுகள் லீகல் டெண்டராகவே நீடிக்கும்” என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |