Samsung-க்கே டப்ஃ கொடுக்கும் Realme., குறைந்த விலையில் பிரீமியம் ஸ்மார்ட்போன் அறிமுகம்
Realme நிறுவனம் தனது முதல் Ultra ஸ்மார்ட்போனாகிய Realme P3 Ultra மற்றும் Realme P3 5G மொடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
Samsung மற்றும் Xiaomi நிறுவனங்களின் உயர்தர மொடல்களை விடக் குறைவான விலையில் இந்த புதிய மொடல்கள் அறிமுகமாகியுள்ளன.
விலை மற்றும் விற்பனை தகவல்
Realme P3 Ultra மாடல் ரூ.26,999 தொடக்க விலையில் கிடைக்கிறது.
8GB + 128GB - ரூ.26,999
8GB + 256GB - ரூ.27,999
12GB + 256GB - ரூ.29,999
இந்த மொடல் Neptune Blue, Orion Red நிறங்களில் vegan leather பின்னணி உடன் கிடைக்கிறது.
விற்பனை மார்ச் 25 முதல் Flipkart, Realme அதிகாரப்பூர்வ இணையதளம், மற்றும் சில்லறை கடைகளில் தொடங்கும். முதல் விற்பனையில் ரூ.3,000 வரை வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.1,000 பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது.
Realme P3 5G மொடல் விலை ரூ.16,999 முதல் தொடங்குகிறது.
6GB + 128GB - ரூ.16,999
8GB + 128GB - ரூ.17,999
8GB + 256GB - ரூ.19,999
முதல் early bird sale மார்ச் 19 மாலை 6PM-10PM இடையே நடைபெறும், முதன்மையான விற்பனை மார்ச் 26 அன்று தொடங்கும்.
சிறப்பம்சங்கள்
- Display – P3 Ultra மாடலில் 6.83-inch 1.5K quad-curved ஸ்கிரீன் (2,000 nits brightness), P3 மொடலில் 6.67-inch AMOLED (1,500 nits brightness).
- Processor – Dimensity 8350 Ultra (Ultra), Snapdragon 6 Gen (P3 5G)
- Batery – 6,000mAh (Ultra - 80W Fast Charging , P3 - 45W Charging)
- Camera – 50MP + 8MP (Ultra), 50MP + 2MP (P3 5G), 16MP selfie
- Android 15 அடிப்படையிலான Realme UI 6
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |