சொந்த வீடு இருந்தும் ஹொட்டலில் தங்கும் செந்தில் பாலாஜி! பின்னனியில் இருக்கும் செண்டிமெண்ட் காரணம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் ஹொட்டலில் தங்கி வருகிறார்.
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், செப்டம்பர் 26 -ம் திகதி காலை செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஹொட்டலில் தங்கும் செந்தில் பாலாஜி
இதையடுத்து, சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி தனக்கு மந்தைவெளியில் சொந்த வீடு இருந்தும் மாரிஸ் ஹொட்டலில் தங்கி வருகிறார். இதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை உள்ளது.
அவர் அதிமுக கட்சியில் இருந்த காலத்தில் மாரிஸ் ஹோட்டலில் தங்கியிருந்த போதுதான் ஜெயலலிதாவால் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மேலும், இங்கு தங்கியிருந்த போது தான் அமைச்சர் பதவியும் கிடைத்தது. இதனால் இந்த ஹொட்டலை செண்டிமெண்டாக பார்க்கிறார்.
தற்போது, சிறையில் இருந்து வந்ததும் அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கேற்ப அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த காரணத்தால் இந்த ஹொட்டலில் தங்கினால் நல்ல செய்தி கிட்டும் என்ற அடிப்படையில் தங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |