இந்தியாவில் விரும்பி குடியேறிய அமெரிக்க பெண்.., அதற்கு முக்கியமான காரணங்கள்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் உள்ள டெல்லியில் குடியேறி வசித்து வருகிறார்.
இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண்
படிப்பு, வேலை, வசதியான வாழ்க்கை உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கும் அமெரிக்காவில் வாழ வேண்டும் என்று தான் ஆசை இருக்கும்.
ஆனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் ஒருவர் கடந்த 2022 -ம் ஆண்டு முதல் அங்கிருந்து இந்தியாவில் உள்ள டெல்லியில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2017 -ம் ஆண்டு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்தபோது பிடித்து போனதால் இங்கு குடியேறியுள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவில் தான் குடியேறுவதற்கான காரணங்களை வீடியோ மூலம் கூறியுள்ளார். அவர் அந்த வீடியோவில், "அமெரிக்காவில் எல்லாமே சுயமானதாக உள்ளது.
சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் வறட்சியான நிலை இருக்கிறது.
இந்தியாவில் யாரும் தனிமையை உணருவதில்லை. ஓடி வந்து எல்லோரும் உதவுகிறார்கள். எங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் வெற்றிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர்களுக்கு இங்குள்ள கலாச்சாரங்கள் போன்ற அனுபவங்கள் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். நான் அமெரிக்காவை நேசிக்கிறன். ஆனால் அது எந்த வகையிலும் சரியான இடம் அல்ல" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |