வரலாறு காணாத கனமழை! தென் கொரியாவில் 14,000 பேர் வெளியேற்றம்..பலி எண்ணிக்கை உயர்வு
தென் கொரியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
14,000க்கும் மேற்பட்டோர்
தென் கொரியா முழுவதும் பல நாட்களாக பெய்த கனமழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
நாட்டின் 15 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் 14,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவிற்கு
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த வாரம் தொடங்கிய கனமழை, வார இறுதியில் தீவிரமடைந்தது. சில பகுதிகளில் ஒரு மணிநேர மழைப்பொழிவு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |