மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்த விஜய பிரபாகரன்
இந்தியாவின் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட, விஜய பிரபாகரனின் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிகழ்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன்
அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுஷிக் ஆகியோர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்கள்.
இதில் விஜயபிரபாகரன் முதல் முறையாக அரசியலில் களமிறங்கினார்.
விஜயபிபாகர் (தேமுதிக), மாணிக்கம் தாக்கூர் (காங்) மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதி முடிவில் விஜய பிரபாகரன் தோல்வியுற்றார்.
இது குறித்து ஏற்கனவே அவருடைய தாய் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருந்தார்.
அதாவது விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட சூழ்ச்சியால் தான் வீழ்த்தப்பட்டார் என கூறினார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் மீள் ஆய்வு நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு தாக்கல் செய்த விஜய பிரபாகரன்
வாக்கு எண்ணிக்கை பணி நிகழும் போது பல மோசடி நிகழ்ந்துள்ளதாகவும்.
கடைசி சுற்று வரை இழுபறி நீடித்த நிலையில் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எனவே விருதுநகர் தொகுதியில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதையடுத்து தற்போது கூடிய ஆவணங்களுடன் நேரிலும் சென்று மனுதாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது அதிக குளறுபடிகள் நடந்துள்ளது. அதற்கான தகுந்த ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக விஜயபிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட போது மதிய உணவு இடைவேளையில் யாரும் இல்லாத நிலையில் 5 ஆம் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |