பொய்யான குற்றச்சாட்டால் சிறைவாசம் அனுபவித்த அகதி: ஆயிரக்கணக்கான யூரோக்கள் இழப்பீடு
புலம்பெயர்ந்தோரை கடத்தியதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்த ஆப்கானிஸ்தான் அகதிக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
50 ஆண்டுகள் சிறை தண்டனை
குறித்த நபருக்கு நஷ்டஈடாக ஆயிரக்கணக்கான டொலர் வழங்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் செவ்வாயன்று தெரிவித்துள்ளனர். கடந்த 2020ல் ஆப்கானிஸ்தான் நாட்டவரான 25 வயது அகிஃப் ரசூலி என்ற இளைஞர் கிரேக்கத்தில் நுழைந்ததும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
@afp
அத்துடன் லெஸ்போஸ் தீவில் கரை ஒதுங்கிய ரப்பர் படகை இயக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்புடைய தீவானது துருக்கிய கடற்கரையிலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது.
கைதான அகிஃப் ரசூலி மற்றும் இன்னொரு ஆப்கான் அகதிக்கும் விசாரணை முடிவில் 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தாம் குற்றமற்றவர் என நிரூபிக்க முடியாமல் மூன்றாண்டுகள் சிறையில் இருந்த இளைஞர் அகிஃப் ரசூலி டிசம்பர் 2022ல் லெஸ்போஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
எந்த இழப்பீடும் திரும்ப தராது
இந்த நிலையில் தற்போது விடுதலை பெற்றுள்ள அகிஃப் ரசூலி, செய்யாத குற்றத்திற்காக சிறையில் பல துன்பங்களை அனுபவித்தேன். என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட நேரத்தை எந்த இழப்பீடும் எனக்கு திரும்ப தராது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரசூலி அநியாயமாக சிறையில் இருந்த காலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டது என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சுமார் 17,000 டொலர் இழப்பீடு வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அகதிகளை ஏற்றிச் செல்லும் படகை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு புலம்பெயர்ந்தோருக்கும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று 2014ம் ஆண்டின் கிரேக்க சட்டம் கூறுகிறது.
மேலும், அவர்கள் ஒரு ஆட்கடத்தல்காரர்கள் அல்ல என்பதும், கடக்க பணம் கொடுக்கப்படவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டாலும் கூட இந்த சட்டம் பொருந்தும் என்றே கூறப்படுகிறது.

பிரித்தானிய பள்ளியில் 39 ஆண்டுகளுக்கு முன் சிறார்கள் துஷ்பிரயோகம்..முன்னாள் கவுன்சில் சேர்மேனுக்கு சிறை தண்டனை
கிரேக்க சிறைச்சாலைகளில் இரண்டாவதாக மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுபவர்கள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்கள் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |