Mukesh Ambaniக்கு விரைவில் வரப்போகும் நல்ல செய்தி., புதிய உச்சத்தை தொடவுள்ள Reliance பங்குகள்
Mukesh Ambaniயின் நிறுவனமான Reliance Jio இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான (satcom) உரிமத்தை விரைவில் பெறவுள்ளது.
நாட்டின் மிகப்பாரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகாபிட் ஃபைபர் சேவைகளை நாட்டில் தொடங்க தயாராகி வருகிறது.
இதற்காக, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தில் அதாவது IN-SPACe நிறுவனத்திடமிருந்துஇலிருந்து விரைவில் தரையிறங்கும் உரிமைகள் (landing rights) மற்றும் சந்தை அணுகல் அங்கீகாரத்தைப் (market access authorisations) பெறலாம்.
ஜியோ விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டாளரிடம் இதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளது.
உலகளாவிய செயற்கைக்கோள் அலைவரிசை திறனை நாட்டில் நிலைநிறுத்த IN-SPACe-ன் அங்கீகாரம் தேவை. ரிலையன்ஸ் ஜியோவுக்கு இந்த அனுமதி கிடைத்தால், மற்ற நிறுவனங்களை விட விரைவில் சாட்டிலைட் மூலம் பிராட்பேண்ட் சேவையை தொடங்க முடியும். இதன் காரணமாக, அதன் தாக்கம் வரும் நாட்களில் Reliance Shareகளிலும் தெரியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் செயற்கைக்கோள்கள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்குவதற்காக, Luxembourgகை தளமாகக் கொண்ட SES நிறுவனத்துடன் Jio Platforms ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ளது. இதில் Jio Platforms 51 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.
ஏர்டெல் (Airtel) முதலீடு செய்த Eutelsat OneWeb, எலோன் மஸ்க்கின் Starlink, Amazon மற்றும் Tata ஆகியவையும் இந்தத் துறையில் நுழைவதாக அறிவித்துள்ளன.
தொலைத்தொடர்புத் துறை ஏற்கனவே ஜியோவின் செயற்கைக்கோள் நிறுவனத்திற்கு Global Mobile Personal Communications by Satellite Services (GMPCS) உரிமத்தை வழங்கியுள்ளது.
இதுவரை, Bharti Airtel முதலீடு செய்த Eutelsat OneWeb மட்டுமே IN-SPACe நிறுவனத்திடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக ET இன் கேள்விகளுக்கு ரிலையன்ஸ் ஜியோ பதிலளிக்கவில்லை.
இந்தியாவில் சாட்காம் சந்தை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, ஆனால் அது வளர்ச்சிக்கான அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது.
Spectrum பெற்ற சில வாரங்களில் தனது நிறுவனம் JioSpaceFiber சேவைகளைத் தொடங்க முடியும் என்று ஜியோ தலைவர் மேத்யூ உமன் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2033ஆம் ஆண்டுக்குள் 44 BillionDollars எட்டும் என்று IN-SPAce சமீபத்தில் மதிப்பிட்டிருந்தது. அப்போது உலகளாவிய பங்கு 8 சதவீதத்தை எட்டும், இது இதுவரை 2 சதவீதமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Reliance Jio to launch satcom services, Mukesh Ambani Reliance Jio, Reliance Shares price, Reliance Jio, Businessman Mukesh Ambani, reliance jio mukesh ambani, RIL Share Price