வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் அரிசி மாவு.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற அரிசி மாவு Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- சிறிதளவு
- கிரீன் டீ- 1½ ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் அரிசி மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
பின் அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கலவையுடன் கிரீன் டீயைச் சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
இந்த Facepackஐ இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், முகத்தை நன்கு கழுவி, இந்த கலவையை போடவும்.
10 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தில் Facepack காய்ந்ததும், முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் முகத்தை தண்ணீரில் கழுவவும். இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தாலே, பலன் தெரியும்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- ஒரு ஸ்பூன்
- அரிசி மாவு- ஒரு ஸ்பூன்
- பப்பாளி விழுது- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கடலை மாவை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அந்த கலவையில் பப்பாளி விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.
தொடர்ந்து ஐந்து நிமிடம் நன்றாக கலந்து விட்டு அந்த கலவையை முகத்தில் முழுவதுமாக தடவவும்.
இறுதியாக Facepack நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் நன்கு வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |