அரிசி பற்றாக்குறையை கூட்டாக எதிர்கொள்ள இந்த 8 ஆசிய நாடுகள் முடிவு
அரிசி பற்றாக்குறை மற்றும் உணவு தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஒருவருக்கொருவர் உதவுவதற்கு முன்னுரிமை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
குறித்த தகவலை மலேசிய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் பிரபல செய்தி முகமை வெளியிட்டுள்ளது. புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றன.
@reuters
இந்த வாரம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் முன்னெடுக்கப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு தொடர்பில் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது சாபு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்த 8 நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு அரிசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால், எஞ்சிய நாடுகள் உதவ முன்வரும் எனவும், உலக அளவில் ஒரு சிக்கல் ஏற்பட்டாலும், தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளுக்கே முன்னிரிமை அளிக்கப்படும் என இந்த 8 நாடுகளும் முடிவு செய்துள்ளது.
மேலும், வியட்நாம், கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தெரிவிக்கையில், அரிசி பற்றாக்குறை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கூடுதல் இறக்குமதிக்கான புதிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் தெரிவித்தன.
இந்தியாவால் பாதிப்பு
மலேசியா தனது தேவைக்கான அரிசியில் 38 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. தற்போது வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், மலேசியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
@reuters
இந்த நிலையில், தானியங்களின் விலை உயர்வை ஈடுகட்டவும், சந்தையில் போதிய அளவு விநியோகத்தை உறுதி செய்யவும் மானியங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் திங்களன்று அறிவித்தது.
இதனிடையே, அரிசியை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நுகர்வோர்கள் உள்ளூர் தானியங்களை பதுக்கி வைப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |