ஆசியாவில் அதிகரிக்கும் அரிசி தட்டுப்பாடு: 15 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றம்
ஆசியாவில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி விலை உயர்ந்து இருப்பது கோடிக்கணக்கான மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அரிசி தட்டுப்பாடு
El Nino வறட்சி எச்சரிக்கை மற்றும் கருங்கடலில் தடைப்பட்டு போன உக்ரைன் தானிய ஏற்றுமதி ஆகியவை உலக அளவில் உணவு பொருட்களுக்கான நெருக்கடியை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டில் அதிகரித்து வரும் அரிசி விலையேற்றத்தை கட்டுப்படுத்த இந்தியா தங்களது பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
அதே சமயம் அரிசி ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வறண்ட வானிலை அரிசி உற்பத்தியை பாதித்துள்ளது.
இதனால் தாய் ஒயிட் அரிசி 5% பாதிப்படைந்துள்ளதால் தாய் அரிசி டன்னுக்கு 648 டொலர்கள் உயர்ந்துள்ளது. தாய்லாந்து அரிசி ஏற்றுமதியாளர்களின் தரவுப்படி அக்டோபர் 2008 பிறகு இந்த அரிசி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அரிசியை முக்கிய உணவாக உட்கொள்ளும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அரிசி விலை உயர்வானது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் உணவு செலவுகளை அதிகரிக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
Bloomberg அறிக்கை
அரிசி விலையேற்றமானது பணவீக்க அழுத்தங்களை அதிகரிக்க செய்யும், அத்தோடு இறக்குமதியாளர்களுக்கான இறக்குமதி கட்டணங்களை அதிகரிக்க செய்யும் என Bloomberg அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐ.நாவும் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தட்டுப்பாடு உலக அளவில் பணவீக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
ஆனால் உள்நாட்டு அரிசி விநியோகத்தை பராமரிக்கவும், சில்லறை விலையை ஒழுங்கமைக்கவும் தான் இந்த ஏற்றுமதி தடை விதித்திருப்பதாக இந்தியா தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.