2025 ஆம் ஆண்டின் பணக்கார நாடு - அமெரிக்காவை முந்திய குட்டி நாடு
PPP அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் பணக்கார நாடு பட்டியலில் குட்டி நாடொன்று முதலிடத்தில் உள்ளது.
2025 ஆம் ஆண்டின் பணக்கார நாடு
ஒரு நாடு எவ்வளவு வளமானது என்பதை ஆராய அந்த நாட்டின் GDP-யை விட, தனிநபர் GDP(PPP)யே முக்கியாமானதாக கருதப்படுகிறது.

எனவே IMF வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் PPP(Purchasing Power Parity) மதிப்பீடுகளை அடிப்படையாக வைத்து, World Atlas 2025 ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகள் பரப்பளவிலோ, மக்கள் தொகையிலோ பெரிய நாடுகளாக இல்லாவிட்டாலும், நிதித்துறை, தொழில்துறை ஆகியவற்றில் வலுவாக உள்ளது.
லிச்சென்ஸ்டீன்
இந்த பட்டியலில், 2,01,112 டொலர் PPP உடன் ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் முதலிடத்தில் உள்ளது.

மேம்பட்ட உற்பத்தி, துல்லியமான கருவிகள், சிறப்பு இயந்திரங்கள் மற்றும் நிதி சேவைகள் ஆகியவை லிச்சென்ஸ்டீனின் பொருளாதார முதுகெலும்பாக உள்ளது.
சிங்கப்பூர்
1,56,969 டொலர் PPP உடன், தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் 2வது இடத்தில் உள்ளது.

உற்பத்தி, நிதி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அதன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
லக்ஸ்சம்பர்க்
1,52,394 டொலர் PPP உடன்,ஐரோப்பிய நாடான லக்ஸ்சம்பர்க் 3வது இடத்தில் உள்ளது. 5 டிரில்லியன் சொத்துக்களை நிர்வகிக்கும் லக்ஸ்சம்பர்க், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 வது பெரிய முதலீட்டு நிதி மையமாக உள்ளது.

லக்ஸ்சம்பர்க், எல்லை தாண்டிய நிதி நிர்வாகம், தனியார் வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
அயர்லாந்து
1,47,878 டொலர் PPP உடன், ஐரோப்பிய நாடான அயர்லாந்து 4வது இடத்தில் உள்ளது.

தொழில்நுட்பம், மருந்து மற்றும் நிதித்துறையில் வெளிநாட்டு முதலீடு ஆகியவை அயர்லாந்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கத்தார்
1,22,283 டொலர் PPP உடன், வளைகுடா நாடான கத்தார் 5வது இடத்தில் உள்ளது.

கத்தாரின் பாரிய இயற்கை எரிவாயு இருப்புக்கள் மற்றும் முன்னணி LNG ஏற்றுமதியாளராக உள்ளது அதன் வலுவான பொருளாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
தேசிய தொலைநோக்கு 2030 மூலம் சுற்றுலா, கல்வி மற்றும் வங்கித் துறைகளுக்கு அதன் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி வருகிறது.
நோர்வே
1,06,694 டொலர் PPP உடன், ஐரோப்பிய நாடான நோர்வே 6வது இடத்தில் உள்ளது.

மேற்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் முக்கிய உலகளாவிய ஏற்றுமதியாளராகவும் நோர்வே உள்ளது. கூடுதலாக, இந்த நாடு ஏராளமான மீன்வளம், காடுகள் மற்றும் கனிம இருப்புக்களால் நிறைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து
97,659 டொலர் PPP உடன், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து 7வது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் அதன் அரசியல் நடுநிலைமை, நிலையான நிறுவனங்கள் மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம், துல்லியமான இயந்திரங்கள் மற்றும் ஆடம்பர கடிகாரங்கள் போன்ற உயர் மதிப்புள்ள ஏற்றுமதிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
புருனே
94,472 டொலர் PPP உடன், ஆசியாவில் உள்ள சிறிய தீவு நாடான புருனே, 8வது இடத்தில் உள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் மூலம், 2024 ஆம் ஆண்டில் புருனே, 4.2% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்தது.
கயானா
94,189 டொலர் PPP உடன், தென் அமெரிக்க நாடான கயானா, 9வது இடத்தில் உள்ளது.

கடல் எண்ணெய் கண்டுபிடிப்புகள் மூலம், கயானா ஒரு முக்கிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.
அமெரிக்கா
89,598 டொலர் PPP உடன்,அமெரிக்கா 10 வது இடத்தில் உள்ளது.

செல்வம் தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றின் மூலம், அதன் பொருளாதாரம் வழிநடத்தப்படுகிறது.
12,101 டொலர் PPP உடன், இந்தியா 124 வது இடத்தில் உள்ளது. அதே வேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இந்தியா உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக உள்ளது.
716.25 டொலர் PPP உடன் தெற்கு சூடான் இந்த பட்டியலில் கடைசி உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |