கால்பந்து போட்டியில் தோல்வி எதிரொலி: தீ பற்றி எரியும் பெல்ஜியம் மற்றும் டச்சு நகரங்கள்!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றதை அடுத்து, பெல்ஜியம் மற்றும் டச்சு நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.
மொராக்கோ வெற்றி
கத்தார் உலக கோப்பையில் இன்று குரூப் எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மொரோக்கா அணி, இரண்டாம் பாதியில் 73 நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றனர், இதனை மொரொக்கோ அணியின் அப்தெல்ஹமீத் சபிரி அடித்து இருந்தார்.
Morocco have produced one of the most remarkable wins in their history ?
— Optus Sport (@OptusSport) November 27, 2022
2-0 over world no. 2 Belgium to spark their #FIFAWorldCup hopes.
It’s their first group stage win since 1998. It’s only their third win in World Cup history.
Group F blown wide open.#OptusSport pic.twitter.com/iS7AL3DJbm
ஆட்டத்தில் 90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் ஆட்டம் நீடிக்கப்பட்டது. அப்போது மற்றொரு மொரோக்கா வீரர் அப்தெல்ஹமீத் சபிரி அணிக்காக கூடுதலாக ஒரு கோலை அடித்து அசத்தினார்.
மொரோக்கோ அணியின் முன்னிலையை சமன் செய்ய போராடிய பெல்ஜியம் அணியால் ஆட்டத்தின் இறுதி வரை பதில் கோல் அடிக்க முடியாமல் போனதால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இறுதியில் ஆட்டநேர முடிவில் மொரோக்கோ அணி 2-0 என்ற முன்னிலையில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.
Thibaut Courtois was HEATED after Belgium’s 2-0 loss to Morocco ?
— ESPN FC (@ESPNFC) November 27, 2022
(via @Saadalshatri_) pic.twitter.com/cxnq7o0H80
நகரங்களில் கலவரம்
கத்தாரில் நடந்த உலகக் கோப்பை மோதலின் போது மொராக்கோ அணி பெல்ஜியத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைந்ததை அடுத்து பல பெல்ஜியம் மற்றும் டச்சு நகரங்களில் கலவரம் வெடித்தது.
பிரஸ்ஸல்ஸில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர், அத்துடன் டஜன் கணக்கான பேரை பொலிஸார் கைது செய்தனர்.
Sky News
டச்சு துறைமுக நகரமான ரோட்டர்டாமில் 500 கால்பந்து ஆதரவாளர்கள் அடங்கிய குழு கலவரத்தில் இறங்கியது. இங்கு பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பட்டாசு மற்றும் கண்ணாடியால் வீசி தாக்கியதில் 2 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
கார்கள் மீது செங்கற்கள் எறியப்பட்டன மற்றும் படிகள் தீ வைக்கப்பட்டன என்று பிரஸ்ஸல்ஸ் காவல் துறை செய்தித் தொடர்பாளர் இல்ஸ் வான் டி கீரே தெரிவித்துள்ளார்.
Sky News
பெல்ஜிய உள்துறை மந்திரி Annelies Verlinden தெரிவித்த தகவலில், ஒரு சில தனிநபர்கள் சூழ்நிலையை எப்படி துஷ்பிரயோகம் செய்யலாம் என்று பார்த்து துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Sky News