இறுதிவரை நிறைவேறாத ரோபோ சங்கரின் ஆசை - என்ன தெரியுமா?
மறைந்த ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கர் உயிரிழப்பு
பிரபல நடிகரான ரோபோ ஷங்கர், படப்பிடிப்பில் இருந்த போது மயக்கமடைந்ததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவில் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவு, திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரோபோ சங்கரின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நிறைவேறாத ஆசை
ரோபோ சங்கர், நடிகர் கமலஹாசனின் தீவிர ரசிகர் ஆவார். தனது குடும்பத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும், கமலுக்கே முதல் அழைப்பிதழ் கொடுப்பார்.
அவருக்கு பேரன் பிறந்த போது, கமலஹாசனின் கையில் குழந்தையை வழங்கி பெயர் வைக்க கூறினார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ப்ரொபைல் படத்தில் கூட கமலஹாசன் தனக்கு முத்தமிடும் படத்தையே வைத்திருப்பார். கமலை ஆண்டவர் என்றே ரோபோ சங்கர் அழைப்பார்.
ரோபோ சங்கரின் இறப்பு செய்தியை கேட்ட கமல் முதல் ஆளாக இரங்கல் தெரிவித்தார். தற்போது நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரோபோ சங்கர்
— Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2025
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
இந்த அளவிற்கு தீவிர கமல் ரசிகரான ரோபோ சங்கருக்கு, கமலுடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய் விட்டது.
ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதுரை முத்து, இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |